படத்திற்கொரு பாட்டு... :: 22-08-2017




நேரிசை வெண்பா :
குழலூதும் கண்ணன், குழல்தந்து சாய்ந்து
குழல்மங்கை யோடு குழைவான் - நிழலாய்;
இதனைக் கவியாய் இனிதாய்ப் படிக்க
இதமாய் இருந்ததே இன்று


Photo Courtesy : Karthik Lakshmi Narasimman  @ FB

4 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

இணைந்தா? இனைந்தா?

நெல்லைத் தமிழன் said... [Reply]

குழலூதும் கண்ணன், குழல்தந்துச் சாய்ந்துக்
குழல்மங்கை யோடுக் குழைவான் - நிழலாய்,
இதழில் முறுவல், இனிதான நாளில்
இதமாய் வருதே இனைந்து !

பொதுவா வெண்பால, 'ச்', 'ப்' என்றெல்லாம் ரொம்ப அழுத்தி வராது. அது வாக்கியம் இல்லை.

குழல்தந்துச் சாய்ந்துக் - குழல்தந்து சாய்ந்து
யோடுக் குழைவான் - யோடு குழைவான்
இதமாய் வருகுதே இணைந்து - என்பதும் சரிதான்

இணைந்து - இதனை ஸ்ரீராம் சொல்லிட்டார்.

என் மனசுல, உங்க வெண்பா, தளை சரியா இருக்கு, வார்த்தை சரியா இருக்கு, அர்த்தம் சரி, ஆனால், 'வெண்பா'வின் நோக்கம், அது கவர் செய்ய நினைக்கும் அர்த்தம் சரியா வரலை. அதாவது ஒரு வெண்பா ஆக்குவதற்கு ஒரு நோக்கமும் அதையொட்டிய சரியான அர்த்தமும் இருக்கணும். ஆனால் நீங்கள் செய்யும் முயற்சி தொடர்ந்தால், இந்த நோக்கத்தை விரைவில் எட்டிவிடுவீர்கள். வாழ்த்துகள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி ஸ்ரீராம் சார்..
நன்றி நெல்லைத் தமிழன் சார்.ஒற்றுப் பிழைகளை சரி செய்துள்ளேன்.
(வெண்பாவின் காரணம்)
இணைப்பிலுள்ள படத்தை பார்த்ததும் மனத்திருந்து வந்த வெண்பா இது.

நெல்லைத் தமிழன் said... [Reply]

மாதவன்-இதனைத் தொடருங்கள் (பக்தியோடு இயைந்த காரியம்). அது எண்ணங்களில் அவன் சிந்தனையை வளர்க்கும். தேவையானபோது அவன் உருவம் சிந்தனையில் வரும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...